தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பாஜகவினர் சிலர் கடைகளை மூடச்சொல்லி கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கடை மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் அடைய நினைக்கின்றனர். இப்படிபட்ட சமூக விரோதிகளின் சதிகள் விரைவில் முறியடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.