நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த விருது கிடைத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் மு.க ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இனிய நண்பரும் தன்னிகரற்ற கலைஞனும் ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.