Categories
அரசியல் சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை – தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாய் பற்றி அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் திமுக எம்பி ராசா 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தும், நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் பற்றி விமர்சித்து பேசியது கண்டிக்கத்தக்கது. இனி எச்சரிக்கையுடன் பேசவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |