Categories
தேசிய செய்திகள்

400க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்காமல்… இழுத்தடிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்..!!

400க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்காமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு நடைபெறவில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரஞ்சி டிராஃபியை தவிர விஜய் ஹாசரே, சையஸ் முஸ்டாக் அலி டிராஃபி மற்றும் பெண்கள் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது.

இதனிடையே சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்தபிறகும் கூட இன்னும் தொடரில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகள் மற்றும் வீடியோ ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. பொதுவாக போட்டி முடிந்த 3 நாட்களுக்குள் நடுவர்கள், போட்டி அதிகாரிகள் தங்களது ஊதியம் குறித்த பில்லை பிசிசிஐ நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால் இந்த முறை சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து 2 மாதமாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை.

பிசிசிஐ பொது மேலளார் சபா கரீம் கடந்த ஆண்டு தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மற்றொரு பொது மேலாளார் இந்த பொறுப்புகளை பார்த்து வந்தார். அவரும் கடந்த டிசம்பர் மாதத்துடன் தனது பதவியிலிருந்து விலிகி கொண்டார். இதனால் தான் பிசிசிஐ-யிடமிருந்து பல பேருக்கு ஊதியம் இன்னும் வழங்கப்படமால் உள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ 4000 கோடி ரூபாய் வருமானம் சம்பாதித்தத பிசிசிஐ முறையான அதிகாரிகளை நியமனம் செய்யாததால் உள்ளூர் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படமால் உள்ளது.

Categories

Tech |