Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்களும் வந்துடோமல’ தமிழில் பேசி … அசத்திய ரோகித் சர்மா… வீடியோ வைரல் …!!!

ஐபிஎல் போட்டிக்காக , மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னைக்கு வந்துள்ளதை கேப்டன் ரோகித் சர்மா, தமிழில் பேசி வீடியோ ஒன்றை  வெளியிட்டார்.

 

14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியானது வருகின்ற 9ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த  முதல் போட்டியில் ஆர்சிபி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த வீரர்கள், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலி ,இன்று சென்னைக்கு வரவுள்ளார். இந்த முதல் போட்டியில் பங்குபெறும் ,மற்றொரு அணியான, மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ,நேற்று சென்னைக்கு வந்தடைந்தனர். இந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உட்பட அனைத்து வீரர்களும், அணிக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் வந்துள்ளனர்.

இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா ,வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ‘வணக்கம் சென்னை, மும்பை இந்தியன்ஸ் இங்க  வந்துட்டோம்’ என்று தமிழில் பேசி அந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட இந்த வீடியோ பதிவானது, தற்போது ரசிகர்களிடையே ,போட்டிக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இவர் தமிழில் பேசிய வீடியோ பதிவும், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டி தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை தொடரை  கைப்பற்றி  வெற்றி பெற்றுள்ளதால் ,இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது .

Categories

Tech |