ஐபிஎல் தொடரில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து , ஹசில்வுட் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஹசில்வுட் விளையாடி வந்துள்ளார். வருகின்ற 9ம் தேதி ,14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹசில்வுட் ,சென்னை சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
அப்போது ஹசில்வுட் தெரிவித்ததில், தற்போது வெஸ்ட் இண்டியன்ஸ் மற்றும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டு இருப்பதால், இந்த வருட ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணியுடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக சிஎஸ்கே- வில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஹசில்வுட் அணியில் பங்கு பெறாததால் , சிஎஸ்கே அணி சிறந்த பவுலரை இழந்துள்ளதால் , பின்னடைவு சந்திக்கும் என்று கருதப்படுகிறது.