Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியை சந்திப்பார்… பா ஜனதா வேட்பாளர் பேட்டி…!!

நந்திகிராமம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியை சந்திப்பார் என பாஜக வேட்பாளர் உறுதியுடன் பேட்டி அளித்துள்ளார்.

மேற்கு வங்காளம் முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றார். அவருக்கு எதிராக பா .ஜனதா சார்பில் சுவெந்து அதிகாரி போட்டியிடுகின்றார். இவர் மம்தா பானர்ஜிக்கு சென்ற காலங்களில் இவர் கட்சியுடன் இணைந்து விசுவாசமாக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது இவருக்கு எதிராக சுவெந்து  அதிகாரியை ஜனதா களத்தில் இறக்கி உள்ளது.

நந்திகிராமம் தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது.ஓட்டு போட்டு முடிந்த பிறகு  சுவெந்து அதிகாரி நிருபர்களிடம் வாக்குச்சாவடி நடக்கும் இடங்களில் பேசியுள்ளார். அதாவது நந்தி கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு அறிமுகமானவர்கள் அதனால் நான் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவேன் என்றும் மம்தா பானர்ஜி தோல்வியை சந்திப்பார் என்றும் நந்தி கிராமம் முழுவதும் ஜனதாவுக்கு சாதகமாக ஓட்டினை பதிவு செய்து வெற்றி பெற செய்வார்கள் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |