Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம், அசாமில்…. இன்று 7 மணி அளவில் 2-ம் கட்ட தேர்தல்..!!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 30 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகின்றது. அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. அதன் பின் மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளில், 30 தொகுதிகளுக்கு மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடக்கின்றது. அவற்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராமம் தொகுதியும் அடங்குகின்றது.

அங்கு அவருக்கு எதிராக போட்டியிடும் பா. ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி சுவெந்து அதிகாரி தேர்தல் களத்தில் நிற்கின்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்புதான் திரிணாமுல்  காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சிக்கு மாறி போட்டியிடுகின்றார். நந்திகிராமம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்து உள்ளது.

அதேபோன்று அசாமில்  39 தொகுதிகள் பிரிக்கப்பட்டு இன்று 2-வது தேர்தல் 7:00 மணி அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு  தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் நிலவுவதால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஓட்டு பதிவினை நடத்தி வருகின்றனர். அதன்பின் அசாமில் 2 மணி நிலவரப்படி 48.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Categories

Tech |