மதுரையில் மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகரான லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் மின்வாரியம் வழியாக அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த லக்ஷ்மணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.