பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது .
இந்திய நாடானது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர் ஆகையால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. அதில் , நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி , சுவாய் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர் .
அப்போது, ஊபர் மற்றும் ஓலா போன்ற கால் டாக்ஸி நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு சட்ட திருத்தம் தான் கொண்டு வர வேண்டும் என பதிலளித்தார். இதையடுத்து, அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.