Categories
அரசியல் மாநில செய்திகள்

கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா… தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்…!!!

செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் கொடுத்துள்ளது. வாக்காளர்களின் அடையாள அட்டைகள், செல்போன் எண்களை ஆதிமுக திரட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளை கண்காணிக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் 2000 ரூபாய் வரை தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |