Categories
உலக செய்திகள்

ஏப்ரல் மாதத்திலிருந்து நடக்கப்போகும் மாற்றங்கள்.. அசத்தலாக அறிவித்த ஜெர்மனி..!!

ஜெர்மனியில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா விதிமுறைகளில் தொடங்கி ஓட்டுனர் உரிமங்கள் வரை பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படவுள்ளன.

ஜெர்மனியில் பள்ளிகள், குழந்தைகளின் பகல் நேர காப்பகங்கள், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என்று அனைத்து மக்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைக்கு பின்பு வாரத்தில் இரண்டு முறை கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போன்று நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் ஜெர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மற்றும் மாகாண தலைவர்கள், குறைந்தது ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர். மேலும் பொது மருத்துவர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கு பிறகு தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

மேலும் ஜெர்மனிக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி விரைவாக கொண்டுவரப்படவுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஏப்ரல் 2, 4 மற்றும் 5 போன்ற தினங்களில் ஈஸ்டர் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் கடைகள் அடைக்கப்பட்டு நிறுவனங்கள் பலவற்றிற்கும் விடுமுறை வழங்கப்படும்.

ஏப்ரல் மாதத்திலிருந்து தனியார் நிறுவன பணியாளர்களின் சம்பளம் 1.4% ஆக அதிகரிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பணியாளருக்கு குறைந்தபட்சம் 50 யூரோக்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் மருத்துவ பணியில் உள்ளோருக்கு ஏப்ரலில் இருந்து குறைவான சம்பளமும் உயர்த்தப்படவுள்ளது.

தானியங்கி வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், இனிமேல் சாதாரணமாக  கியர் இருக்கும் வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல் இறைச்சி தொழிலை மேற்கொள்ளும் பணியாளர்கள் மற்றும் கார்களில் கோடை காலத்திற்குரிய டயர்கள், ரயில்களில் பயணிகள் சேவையை அழைப்பதற்கான இலவசமான தொலைபேசி வசதி போன்ற பல வகையான மாற்றங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

Categories

Tech |