Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தொகுதி மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன்”… மயிலாடுதுறை தொகுதியில்… காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி..!!

காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் மயிலாடுதுறை பகுதி மேன்மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர், சித்தர்காடு, மல்லியம், மறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குப்பைகள் அள்ள டிராக்டர்கள், சாய் விளையாட்டு அரங்கம் என இன்னும் எண்ணற்ற பணிகள் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய மந்திரி மணி சங்கர் ஐயர் மூலம் நடந்துள்ளது.

இந்த பணிகள் நடைபெறுவதற்கு நானும் அவருடன் உறுதுணையாக இருந்தேன். ஒரு கோடி மதிப்பீட்டில் மகப்பேறு பிரிவு கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தியுள்ளேன். மயிலாடுதுறை பகுதி மேன்மேலும் வளர்ச்சியடைய கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Categories

Tech |