Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாறுவேடம் அணிந்து நேர்த்திக்கடன்… சிறப்பான பங்குனி பொங்கல் விழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தர்மபட்டி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோவிலுக்கு திருவிழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்தனர். இந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் இளைஞர்கள் மாறுவேடம் அணிந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |