பிரஜின்-சாண்ட்ரா தம்பதியினர் தங்களது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை சாண்ட்ரா சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜினை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் பிரஜின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஜின்-சான்ட்ரா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்தனர்.
#Prajin #Sandra Daughter's Birthday Celebration…😍😍😍😍 pic.twitter.com/yErMaMMWql
— chettyrajubhai (@chettyrajubhai) April 1, 2021
இந்நிலையில் சமீபத்தில் பிரஜின் – சாண்ட்ரா தங்களது அழகிய இரட்டை குழந்தைகளின் இரண்டாம் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ஆட்டம், பாட்டம் என சிறப்பாக நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.