பிக்பாஸ் பிரபலம் சனம் செட்டி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சனம் செட்டி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த எந்த ஒரு படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் இவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி சில வாரங்களில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Midweek Motivation ❤️#shoulderblaster pic.twitter.com/ikycYe4Whv
— Sanam Shetty (@ungalsanam) March 31, 2021
இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் சனம் செட்டி ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சனம் வெயிட் லிப்ட் செய்கிறார். ஆனால் அதில் எடைகள் இருப்பது போன்று தெரியவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்க வெறும் ராடை மட்டும் தான் தூக்குறீங்களா?…என கலாய்த்து கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.