Categories
மாநில செய்திகள்

ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா உறுதி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பி வருகின்ற நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது.

மேலும் அரசியல் தலைவர்களையும் கொரோனா ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் ஜவாஹிருல்லா கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஜவாஹிருல்லாவுடன் நெருக்கமாக இருந்த அரசியல் கட்சி நிர்வாகிகல் உடனே பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |