Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நற்பலன் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளது.

நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வரவுகள் வருவது கொஞ்சம் சிக்கலாகவே இருக்கும். தயவு செய்து வருமானம் வராத வேலையை எடுத்து செய்ய வேண்டாம். வெயிலில் நீங்கள் அதிகப்படியாக சுற்றுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது. தேவையற்ற சிந்தனைகளால் மனதில் கொஞ்சம் அமைதியும் குறையும். எதைப் பற்றியும் யாரைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் படுத்தவுடன் தூக்கம் வராது தூங்குவதற்கு சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். தூங்குவதில் சிக்கல்கள் ஏற்படும் மனதை போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். தயவுசெய்து இவை அனைத்திற்கும் நீங்கள் ஒரு முடிவு கட்ட வேண்டும். நீங்கள் இன்று யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெரிவிப்பது மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். சில ஏமாற்றங்கள் ஏற்படும் உங்கள் மனம் சிறிது கஷ்டப்படும். மற்றவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்வதற்கு சிறிது முயற்சி செய்வது சிறந்தது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் சிறிது சோர்வடைய கூடும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சிறிது குறைவாகவே இருக்கும். நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது சிறந்தது. நிதானத்தை கையாள்வது மிகவும் சிறந்தது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம்.
வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். பயணத்தின் பொழுது நீங்கள் வெயிலில் அலைய வேண்டாம். அதாவது அலைச்சலைக் குறைத்துக் கொள்வது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டும். கவனமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பிற்கு கண்டிப்பாக நல்ல பலன் கிட்டும். இன்றைய நாளை நீங்கள் பொறுமையான நாளாக ஓட்டி செல்வது சிறந்தது. நீங்கள் ஆலயம் சென்று வருவது மிகவும் சிறந்தது. குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள் வீண் வாக்குவாதம் எதுவும் செய்ய வேண்டாம். அவசரப்பட்டு எவ்விதமான வார்த்தைகளையும் விட்டுவிட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கும் இதே நிலைமை தான். மற்றவரை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மாணவ மாணவியர்கள் சிறிது யோசித்து செயல்பட வேண்டியிருக்கும்.
இன்று நீங்கள் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் நீங்கள் பாடங்களைக் கற்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குவது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம் வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |