தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் திமுகவினரும், அதிமுகவினரும் மாறி மாரி குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்ப்போது பேசிய அவர், நான் என்ன சொல்வேன் என ஜெராக்ஸ் மிஷினுடன் காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஹெலிகாப்டர் தருவதாக கூட கூறுவார்கள். மக்கள் அதை நம்பக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.