திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை ரோகிணி அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகை ரோகிணி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, பல்வேறு சம்பவங்களால் கடந்த வருடம் போராட்டம் நடத்தி உள்ளோம். அதில் முக்கியமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கூறலாம். இந்த சட்டத்தின்படி நீங்கள் இந்திய குடிமகன் என்று நிரூபணமாக உங்கள் தாத்தா, அப்பா ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது ஆகும். புதிய கல்விக் கொள்கை, எட்டு வழி சாலை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர் போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அதற்குள் வேளாண் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. அரசு இந்த சட்டங்களை மாநிலங்களவையில் ஒப்புதல் பெறுவதற்கு துணை நின்றது. ஆனால் அ.தி.மு.க அரசு தற்போது பிரச்சாரத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் வேளாண் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்போம் என்று பொய் கூறி வருகின்றனர் என்றும் அவர் பேசினார்.