Categories
லைப் ஸ்டைல்

தினமும் 4 பாதாம் பருப்பு சாப்பிடுங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது….!!!

பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகிறது. பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.
பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.

Categories

Tech |