தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். நாமும் ஒட்டு போடுவதற்காக தயாராக இருக்கிறோம். இந்நிலையில் நம்முடைய கையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டு போட முடியாது.
எனவே வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது எடுத்துக்காட்டாக உங்கள் பெயர் குமார் என வைத்து கொள்வோம். இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட செல்லும்போது உங்கள் பெயர் குமார் இல்லை என்று பூத் ஏஜென்ட் கூறும் பட்சத்தில் நான் தான் குமார் என்று நிரூபிக்க வேண்டும். அதற்கு 49J Challlengedvote என்ற பிரிவின் கீழ் ரூ.2 டெபாசிட் செய்து பூத் ஏஜென்ட் அவருடைய எதிர்ப்பை தெரிவிப்பார்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நம்மிடமும், ஏஜெண்டிடமும் விசாரிப்பார்கள். தேவைப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரர்கள், விஏஓ ஆகியோரிடம் நாம் உண்மையான குமார் தானா? என்று விசாரிப்பார்கள். அந்த விசாரணையில் நாம் ஆள் மாறாட்டம் செய்தது உண்மையானால் போலீசிடம்ஒப்படைத்துவிடுவார்கள். அதேபோல் ஏஜென்ட் பொய் சொல்கிறார் என்றால் அவரை எச்சரித்து அனுப்புவார்கள். எனவே ஓட்டு போட செல்லும் போது முதலில் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.