Categories
தேசிய செய்திகள்

ரூ.800 தள்ளுபடியில் சிலிண்டர் வாங்கலாம்…. எப்படி தெரியுமா…? இதை முதலில் பண்ணுங்க…!!!

சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.800 வரையிலான கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக paytm மூலம் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

இதற்கு முதலில் பேடிஎம் ஆப்பில் “boook cylindar” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களுடைய சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய செல்போன் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரை பதிவிட்டு proceed கொடுக்கவேண்டும். நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டர் விலை போன்ற விவரங்களை பார்த்து புக் செய்ய வேண்டும். தற்போது டெல்லியில் சிலிண்டர் விலை 809 ரூபாயாக இருக்கிறது. paytm மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தால் 800 ரூபாய் தள்ளுபடியாகி 9 ரூபாயில் சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.

Categories

Tech |