Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான இணையவழி கருத்தரங்கம்… சிவகங்கை டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில்… சிறப்பு நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இணையவழி கருத்தரங்கம் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாணவிகளுக்கான இணையவழி கருத்தரங்கம் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர்முகமது வரவேற்று பேசினார். இதற்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினரை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உணவு முறை துறை மற்றும் ஊட்டச்சத்து துறை உதவி பேராசிரியை ஏஞ்சல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை பற்றி கூறினார். மேலும் அதை மாற்றுவதற்கான உணவு முறை பழக்கவழக்கத்தை பற்றி சிறப்பு உரையாற்றினார். இதில் நன்றியுரையை விலங்கியல் துறையில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி நமீரா கூறினார். இந்த விழாவினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செய்யது யூசுப் ஒருங்கிணைத்தார்.

Categories

Tech |