ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களிலும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அரசு விடுமுறை தினங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் ஜூலை மாதத்துக்குள் 30 கோடிப் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 30.31லட்சம் பேருக்கு பொரோனோ தடுப்பூசி போட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.