செம்பு பாத்திரத்தில் நாம் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்று விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
முன் காலங்கள் நம்முடைய சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் தான் பிடித்து வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய காலங்களிலோ இந்த செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் நமக்கு கிடைத்துவிடும். தண்ணீருக்கான செலவு மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? செம்பு பாத்திரத்தில் 24-மணி நேரம் தண்ணீரை வைத்திருந்து பின்னர் பார்த்தால் அதில் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் எதுவும் இல்லாமல் போய்விடுமாம்.
கிணற்றில் கிடைக்கின்ற தண்ணீர் செம்புக் குடத்தில் ஊற்றி வைத்ததும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடும். செம்பு குடம் இல்லையென்றால் ஒரு செம்பு தகடை குடத்தில் போட்டு வைத்தாலும் போதும். மூன்று நாளைக்கு ஒருமுறை செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தால் பாசி பிடித்து போய் இருக்கும். அதெல்லாம் தணண்ணீரிலுள்ள கெட்ட பாக்டீரியாக்கள் தான். பின்னர் தகட்டை சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்தில் பல வீடுகளில் செம்புக்குடம்தான் உபயோகப்படுத்துவார்கள். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில் தான் தண்ணீர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ஆரோக்யமாக வாழலாம் என்பது பழங்கால தமிழர்களின் நம்பிக்கையாகும். தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் உள்ள இந்த மூன்று தோஷங்களை சமநிலையுடன் வைத்திருக்க உதவும். இதுபோன்ற தமிழர்களின் பழக்கவழக்கங்களை கண்டு அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர்.