Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம…. தாறுமாறாக காரை ஒட்டி சென்றவர்.. கோர விபத்தில் பறிபோன உயிர்… நாமக்கல்லில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியான துரைசாமிக்கு திருமணமாகி  ஜோதிமணி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் இத்தம்பதிகள் இருவரும் தொழில் சம்பந்தமாக மொபட்டில் வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி  செல்வதற்க்காக சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  இவர்கள் வந்து கொண்டிருக்கும்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று துரைசாமி மொபட்டின் மீது எதிர்பாரத விதமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் அவர்கள் கிழே விழுந்ததை பார்த்த அந்த காரை ஒட்டிச் சென்றவர்கள்  காரை நிருத்தாமல் ஜோதி மணி மீது ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுக் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜோதிமணிக்கு அளித்துப்பட்ட  சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |