நடிகை ஹூமா குரேஷியிடம் பிரபல நடிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை . இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று , நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருட காலமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் என போனிகபூர் அறிவித்தார் . இருப்பினும் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் சித்தார்த் ‘வலிமை’ பட கதாநாயகி ஹீமா குரேஷியிடம் அப்டேட் கேட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.