தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கி.வீரமணி கூறுகையில், “வருமான வரித் துறையை ஏவி விடுவது திமுக கூட்டணி வெற்றிக்கு உரம் போடுவது ஆகும். அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அதிமுக, பாஜகவுக்கு எதிரான ஆழிப்பேரலையை தடுத்துவிட முடியாது” என்று பேசியுள்ளார்.