சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மத்திய துணை ராணுவப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதிக்கு மத்திய துணை ராணுவப் படையினர் வருகை தந்தனர். அங்கு அவர்கள் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையிலும், அச்சத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினருடன் இணைந்து காளையார்கோவில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.