கொரோனா தொற்றுக்கான அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தியதால் 30 பேருக்கு அரிய ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை செலுத்துவதால் இரத்த உறைவு ஏற்படுவதாக பல செய்திகள் வெளியாகியது. இருப்பினும் ரத்த உறைவு ஏற்படக்கூடிய அபாயத்தை விட கொரோனா தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாக இருப்பதால் அதனை செலுத்துவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகினர்.இதனால் பல ஐரோப்பிய நாடுகளும் தடுப்பூசிகளை செலுத்துவதை ஆரம்பித்தனர்.
எனினும் ரத்த உறைவு போன்ற கடுமையான பாதிப்பால் சில நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதை தடை செய்துள்ளனர்.MHRA வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த மார்ச் 18ஆம் தேதி தடுப்பூசி செலுத்தியவர்களில் 5 பேருக்கு அரிய மூளை ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை செலுத்தி கொண்ட 18.1 மில்லியன் மக்களில் 30 பேருக்கு இந்த உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .