Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கோங்க…. நான் தலைவர் கலைஞரின் மகன்…. எதற்கும் அஞ்சமாட்டேன் – ஸ்டாலின் காட்டம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கு மத்தியில் வருமானவரித்துறையினர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு, செந்தில் பாலாஜியின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இதனால் திமுகவை சேர்ந்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது அதிமுகவின் பணப்பட்டுவாடாவை மறைப்பதற்காக பாஜக செய்யும் வேலை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டாலின், மோடிக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் தலைவர் கலைஞர் அவர்களின் மகன். எதற்கும் அஞ்ச மாட்டேன். இது திமுக என்பதை மறந்து விடாதீர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |