Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில்… 4 நாட்களுக்கு… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த ஐந்து நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும். அதனால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |