கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வரும் காரணத்தினால் அந்நாட்டு பிரதமர் 4 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு பின்பற்றபட்டு வந்தது .தற்போது பல நாடுகளில் தொற்றின் அச்சுறுத்தல் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி கனடாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக அந்நாட்டு பிரதமர் “டக் போர்டு” வருகிற 3 ஆம் தேதி அதிகாலை 12.01 மணியிலிருந்து ஒன்டாரியோ மாகாணத்தில் 4 வார கால ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் அவசரகால நிலை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மாகாணத்தை சுற்றியுள்ள 34 பொது சுகாதார மண்டலங்களும் இந்த 4 வார ஊரடங்கு பொருந்தும் என்று உறுதியாக அறிவிப்பு தெரிவித்துள்ளார்.