பெரம்பலூரில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி கொண்டு தான் வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல்அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 36 பேரும் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 388 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 755 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.