கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ரஷ்யா ஸ்புட்னிக் 5 என்ற புதிய தடுப்பூசியை அறிமுகபடுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகள் பல மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்திய நிறுவனங்கள் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் ஜனவரி 16ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் செலுத்தும் பணி தொடங்கியது.
மேலும் இதுபோன்ற புதிய தடுப்பூசிகள் பயன்பாட்டிற்க்கு வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு அந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது .
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி பற்றிய முழு தகவலையும் அதனின் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடம் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு ரஷ்யா தயாரித்து வரும் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி செப்டம்பர் மாதத்திலிருந்து உபயோகித்து வரும் நிலையில் தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று அறிவித்துள்ளனர்.