பெரம்பலூரில் வாகனம் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூர் வடக்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு அந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விபத்திற்கு காரணமான வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.