Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 198 மதுபாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுரங்கம் மற்றும் கனிமத்துறையின் தனி துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 பீர் பாட்டில்கள், 150 வாட்டர் பாட்டில்கள் என மொத்தம் 198 மதுபான பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரிடம் அந்த மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |