Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள்… தயார் செய்யும் பணி மும்முரம்..!!

தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களை தயார் செய்யும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் பதிவு செய்யும் எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 428 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், கருவிகள் ஆகியவை உதவி ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 388 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தலன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த தேவையான பூத் சிலிப், வாக்காளர்பட்டியல், வாக்குப்பதிவு எந்திரம், பேனா, வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், பென்சில், மெழுகுவர்த்தி, சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், அடையா மை ஆகிய பொருள்கள் குன்னம் தொகுதிக்கு அங்குள்ள தாசில்தார் அலுவலகத்துக்கும், பெரம்பலூர் தொகுதிக்கு தாசில்தார் அலுவலகத்துக்கும் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொருள்களை அலுவலர்கள் பிரிக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த பொருட்கள் தனித்தனியாக பையில் போடப்பட்டு, வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் வகையில் ஊழியர்கள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Categories

Tech |