Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் முழு ஊரடங்கு?… பரபரப்பு அறிவிப்பு…!!!

சென்னையில் தேர்தலுக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஏற்கனவே தளர்வுகள் உடன்அமல் படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |