நாடு முழுவதும் தற்போது வரை ஆறு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதனால் நாடு முழுவதும் இதுவரை 6,87,89,138 கொரோனா தடுப்பூசிக்கான மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.