நாகையில் 10-ற்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகபட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தை அருகே வெள்ளப்பள்ளம், மணியன் தீவு, புஷ்பவனம், வானவன் மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை என பத்திற்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் மற்றும் கடலில் கடும் காற்று இன்று காணப்படுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத காரணத்தினால் கரையோரம் பத்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆள் நடமாட்டம் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.