நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
#Karnan U/A 🐘 https://t.co/i2H8TYJARM
— Kalaippuli S Thanu (@theVcreations) April 2, 2021
கர்ணன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கர்ணன் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.