தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டியதால் அக்கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவெற்றியூர் தொகுதியில் எர்ணாவூர் பகுதியில் பேசும்போது “உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாய் தடுமாறி கூறிவிட்டுப் பின்னர், தனக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று சீமான் கூறினார்.
அண்ணன் சீமான் ஆதரவு பெற்ற உதயசூரியன் pic.twitter.com/K7gQthzw7z
— Marana Mass 😉 (@Marana_Mass) April 2, 2021