பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் வீட்டிற்குள் சந்தித்து கொள்ளாதீர்கள் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் நாட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கிறார். இதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பூசிகளினால் முழுமையாக தடுத்துவிட முடியாது என்று அரசு கருதுகிறது.
எனவே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட இரு நபர்கள் வீட்டிற்குள் சந்திக்கக்கூடாது. ஏனென்றால் 100 சதவீத பலனை தடுப்பூசிகள் தரவில்லை. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். வெளியிடங்களில் உங்கள் விருப்பப்படி பலருடன் இணைந்து விளையாடிக்கொள்ளலாம். ஏனெனில் வெளியே இருக்கும் சமயத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.