தளபதி பட பாணியில் ரஜினிக்கு, மம்முட்டி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் மம்முட்டி, ரஜினியின் தளபதி பட பாணியில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது தளபதி படத்தில் ரஜினிகாந்த் சூர்யாவாவும், மம்முட்டி தேவாவும் நடித்திருந்தனர். அதனை வைத்து “தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சூர்யா. அன்புடன் தேவா” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Congratulations Surya for the Dadasaheb Phalke Award.
With love
Deva pic.twitter.com/lPkp5WEPbu— Mammootty (@mammukka) April 1, 2021