Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“புதிய கல்வி கொள்கை-2019” மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்..!!

நாகலாபுரத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கை குறித்து சரியான கருத்தை மக்களிடம் தெரிவிக்க விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி  மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், புதிய கல்விக் கொள்கை-2019 என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அக்கல்லூரி மாணவர் பேரவை சார்பில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு மாணவர் பேரவைத் தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். பின் நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் பொருளாதார துறை  பேராசிரியர் நா.மணி உயர் கல்வியில் புதிய மாற்றத்தை பற்றி பேசும் மத்திய அரசு கல்விக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மத்திய அரசு செய்ய வேண்டிய நிதிசார் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஏன் பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

இவரை தொடர்ந்து பேசிய பொருளாதாரத் துறை தலைவர் செ.சுரேஷ் பாண்டியன், தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் பாலின சமத்துவம், பெண் கல்வி மேம்பாடு, கிராமப்புற மாணவர்கள் இடைநிற்றல் , மாற்றுத் திறனாளிகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று  பேசினார். இறுதியாக பேசிய கல்லூரி முதல்வர் பேராசிரியர் சாந்தகுமாரி இது குறித்து பேசும் போது,

உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் புதிய கல்வி கொள்கை குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த சிறப்பு கருத்தரங்கில் பேராசிரியர்களான சண்முகம், அசோக்குமார், முனியசாமி, விநாயகமூர்த்தி, மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர் பேரவை பொருளாளர் கருப்பசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்து கருத்தரங்கை சிறப்பாக முடித்து வைத்தார்.

Categories

Tech |