Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி… அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன்… தெறிக்கவிடும் ‘கோடியில் ஒருவன்’ பட டிரைலர்…!!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் பட டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’‌. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கேஜிஎஃப் பட நடிகர் ராமச்சந்திர ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |