Categories
உலக செய்திகள்

பிறக்கபோவது ஆண் குழந்தையா..? பெண் குழந்தையா..? நடத்தப்பட்ட சாகசத்தில் விபத்து.. இருவர் பலியான சோகம்..!!

மெக்சிகோவில் தங்களுக்கு பிறக்கபோவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை அறிய ஆவலுடன் நிகழ்த்தப்பட்ட சாகச விமானம் விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மெக்சிகோவில் உள்ள கேன்கன் என்ற நகரில் இருக்கும் கரீபியன் கடலுக்கு அருகில் இருக்கும் காயலில் விமானம் ஒன்று சாகசம் செய்து பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது ஒரு இளம் தம்பதியினர் ஒரு படகில் இருந்து கொண்டு தங்களுக்கு பிறக்கவுள்ளது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை காண மிகுந்த ஆவலுடன் விமானத்தை உற்று நோக்கி காத்துக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த விமானம் பிங்க் நிற புகையை வெளியிட்டது. அதாவது பிங்க் நிறம் பெண் குழந்தையை குறிக்கும். இதனால் உற்சாகம் அடைந்த தம்பதியினர் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். அந்த சமயத்தில் திடீரென்று சாகசம் செய்து கொண்டிருந்த விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானி மற்றும் துணை விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |