தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பணம் பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து வருமானவரித் துறையினர் தீவிரமாக சோதனை நடத்துகின்றனர். இந்த தகவலை கேட்டு அப்செட்டாகிய ராஜேந்திர பாலாஜி பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு பரபரப்புடன் கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.